தமிழ் சினிமாவில் இப்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் என்றால் அது நடிகர் தல அஜித் மற்றும் நடிகர் தளபதி விஜய் ஆகிய இருவரும்தான்.
![Master of record actor Vijay? Master of record actor Vijay?](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/11/Master-of-record-actor-Vijay-850x478.jpg)
இருவரின் படங்களும் தமிழக திரையரங்குகளில் வெளியாகும் போது தமிழ்நாடே திருவிழா போல் ஆகிவிடும். அதுமட்டுமில்லாமல் படத்தின் விளம்பரம், படத்தின் குறும் ஒளி ஒலி , சுவர் ஒட்டி என புதிய படத்தை பற்றி எந்த ஒரு தகவல்கள் வந்தாலும் அதை உலகளவில் பரவ செய்து விடுவார்கள் இருவரின் ரசிக பட்டாளங்கள்.
![Master of record actor Vijay? Master of record actor Vijay?](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/11/Master-of-record-actor-Vijay-3-1-850x478.jpg)
அந்த வகையில் சென்ற தீபாவளியை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வீடியோ விளம்பரம் உலக அளவில் பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் உலக அளவில் அதிக விருப்பங்களை சுமார் 2.3 மில்லியனுக்கு மேலாக வாங்கிய வீடியோ விளம்பரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் குறும் ஒளி ஒலியின் சாதனையை வெறும் நான்கே நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
![Master of record actor Vijay? Master of record actor Vijay?](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/11/Master-of-record-actor-Vijay-2-850x478.jpg)
சென்ற வருடம்\ 2019 பொங்கல் வெளியீடாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். அஜித்தின் சினிமா வாழ்கையில் அதிக அளவில் பண வசூல் செய்து சாதனை படைத்த படமும் அதுதான். விஸ்வாசம் படத்தின் குறும் ஒளி ஒலி வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் 33 மில்லியன்களுக்கும் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.
![Master of record actor Vijay? Master of record actor Vijay?](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/11/Master-of-record-actor-Vijay-4-850x478.jpg)
ஆனால் தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜய்-யின் மாஸ்டர் பட வீடியோ விளம்பரம் 34 மில்லியன் பார்வையாளர்களுக்குமேல், வெறும் நான்கே நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவரின் ரசிகர்களும் இணையதளங்களில் குறும் ஒளி ஒலி வேறு, பட விளம்பாம் வேறு என்ற பஞ்சாயத்தில் ஈடுபட்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comment
Visitor Rating: 5 Stars