


தமிழ் சினிமாவில் “புது நெல்லு புது நாத்து” என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பலதரப்பட்ட மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார்.



மேலும் நெப்போலியன் தன்னுடைய கட்டமைப்பான தோற்றத்திற்கும் முரட்டுத்தனமான பேச்சிற்கும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.இதனால் இன்றுவரை தமிழ் மக்களின் மனதிற்குள் மாறாத இடம் பிடித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் நடித்து சாதனை புரிந்த நெப்போலியன் தனது தொழிலிலும் பெரும் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது நெப்போலியனின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. அதாவது சென்னையில் தொழில் தொடங்கிய நெப்போலியன் அதற்குப்பின்பு அமெரிக்காவில் கால்பதித்து குடும்பத்துடன் அங்கேயே இருந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான தனுஷ் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். அதனால் இதை போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திருநெல்வேலி அருகே மருந்துவமனை ஒன்று வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் நடிகர் நெப்போலியன்.



பல வருடங்களாக இவர் நடத்திவரும் மருத்துவமனைக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏனென்றால் தன் மகனைப் போல் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த மருத்துவமனையை அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நடிகர் நெப்போலியனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமா பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை கண்ட நெப்போலியனின் ரசிகர்கள் பலர், “இன்னும் அதே கம்பீரத்தோடு இருக்கீங்க சார்” என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்த்லங்களில் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.