Actress Khushbu Kumural - I will not be an interlocutor for the Congress leadership

கடந்து சென்ற 1990 களில் பிரபலமாக இருந்த நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசிய்தால் திமுகவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்

Actress Khushbu Kumural - I will not be an interlocutor for the Congress leadership

அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். குஷ்பு ராகுல்காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சி தலைவியாக மாறினார், இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

Actress Khushbu Kumural - I will not be an interlocutor for the Congress leadership

இந்த நிலையில் திடீரென நடிகை குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக வதந்திகள் பரவியது. அதனை உறுதி செய்தது போல் இன்று காலை அவர் புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்தார் இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Actress Khushbu Kumural - I will not be an interlocutor for the Congress leadership

நடிகை குஷ்பு பாஜகவில் சேரப் போகிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து கூறுகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு புகார் பறந்தது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை குஷ்பு தலைமை எது சொன்னாலும் அதை அப்படியே தலையாட்டும் தொண்டனாக தான் இருக்க மாட்டேன் என்றும் புதிய கல்விக் கொள்கை குறித்த திட்டத்தில் ராகுல் காந்தியின் கருத்து மற்றும் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களில் இருந்து தான் வேறுபடுவதாகவும்,

Actress Khushbu Kumural - I will not be an interlocutor for the Congress leadership

இந்த புதிய கல்விக் கொள்கை உண்மையிலேயே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் கொள்கைக்கு எதிரான கருத்து கூறிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்