Review Ratings
voteநடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பலத்திறைமைகளை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் சினிமாவில் களமிரங்கியுள்ளார்.



அந்த வகையில் “ரவுடி பிக்சர்ஸ்” சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம் “நெற்றிக்கண்”. தன் காதலியான நடிகை நயன்தாராதான் இந்த படத்தின் நாயகி. மேலும் “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இந்த படத்தை இயக்குகிறார்.



முக்கியமாக இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக “நெற்றிக்கண்” படத்தின் குறும் வலை ஒளி ஒலியை யூட்டுபில்வெளியிட்டுள்ளார் நயன்தாரவின் காதலர் விக்னேஷ் சிவன். அதில் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நடிகை நயன்தாரா, மேலும் ஒரு குட்டிக் கதை சொல்வது போல் அமைந்துள்ள அந்த வலை ஒளி ஒலி, தமிழ் பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



அடுத்து என்னவரும் என்று யூகிக்க முடியாத படமான இதில் நடிகர் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வரும் 2021-ஆம் ஆண்டு வெளியிட உள்ளனர் படக்குளுவினர்.


