+1
+1
+1
+1
+1
+1
+1
Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"
Kiruba Store - Online Shopping Store in India

ரஜினி தனது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அளித்த ஆலோசனையின் காரணமாக, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து, ‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’ என்று ரஜினி ஆதரவு போஸ்டர்கள் சென்னையில் அங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டு குவிந்து வருகின்றனர்.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"

சினிமா நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதன் பின்னர் 1998 மக்களவைத் தேர்தலிலும் குரல் கொடுத்தார். அதன் பின்னர் அவர் அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு காண்பிக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமும் சம தூரத்தில் நட்பை மட்டுமே பேணி வந்தார். ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் அரசியல் ஓய்வால் 2017-ல் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன், தலைவர் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன். 2021 தேர்தலில் நேரடியாகக் களம் இறங்குவேன் என ரஜினி முன்பு அறிவித்தார்.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"

அதைக்கேட்ட ரசிகர்கள் கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்றம் அமைக்கப்பட்டது. கட்சியின் பெயர், கட்சி நிர்வாகிகள், கட்சி கொள்கை பின்பு அறிவிக்கப்படும் என்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்சியின் பெயரை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரியில் பேசிய ரஜினி விரைவில் கட்சியை அறிவிப்பேன், தனக்கு தமிழக முதல்வர் ஆகும் ஆசை இல்லை, யாரையாவது ஒருவரைக் கைகாட்டுவேன் என்று பேசினார். ரசிகர்களுக்கு ஆசையை காட்டி அவர்கள் பணத்தை வீணாடிக்க வைக்க எனக்கு எண்ணமில்லை என்றார். ”இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களிடம் சென்று நம் எண்ணத்தைச் சேருங்கள். மக்களிடம் ஒரு மாற்றம் மற்றும் எழுச்சி ஏற்பட வேண்டும். அது நாடு முழுவதும் பரவ வேண்டும். அப்போதுதான் நான் வருவேன்” என்று ரஜினி பேசினார்.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"
Aztec Technologies - Domain and Hosting Company

ஆனால், மார்ச் மாதம் முதல் கொரோனா பரவியதால் தமிழகத்தில் ஊரடங்கு அமலானது. கொரோனாவின் அதி தீவிரத்தால் உலகமே முடங்கியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆறு மாதம் பொதுவெளியில் வராமல், சினிமா துறையில் படப்பிடிப்பு ஆரம்பித்த பின்னும் ‘அண்ணாத்த’ என்ற பட ஷூட்டிங்கில் ரஜினி கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் இன்நிலையில், ரஜினியின் அறிவிப்பு எதுவும் வராத நிலையில், ரஜினி எழுதியது போன்று ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"

அதில், “கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ‘கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்து அதை உங்கள் உடம்பில் செலுத்திய பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்குச் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேறு செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம்.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"

அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் மொத்த உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்’. நான் அரசியலுக்கு வருவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்” என்று ரஜினி தெரிவித்ததாக ஒரு கடிதம் வைரலானது. நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் கட்சி தொடங்க வேண்டுமென்றால் டிசம்பரில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொருள்படும்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினி நேற்று ஒரு மறுப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"

“அந்த கடித அறிக்கை தனது அறிக்கை அல்ல. ஆனால் அதில் மருத்துவர்கள் ஆலோசனை குறித்த தகவல்கள் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்” எனத் தெரித்திருந்தார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிடலாம் என்கிற கருத்து வெளியானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று சென்னை முழுவதும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘நீங்க வாங்க ரஜினி. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான். வரும் தேர்தலில் ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Support poster pasted in front of Rajini's house by fans "Now or never"

இந்த நிலையில், ‘இப்ப இல்லன்னா எப்போதும் இல்ல’ என்கிற ரஜினியின் வாசகத்தை டி ஷர்ட்டில் பொறித்தபடி சென்னை மத்திய மாவட்ட ரஜினி ரசிகர்கள், ரஜினியின் போயஸ் இல்லம் முன் திரணடு குவிந்த்னர். ரஜினி தமிழக அரசியலுக்கு வரவேண்டுமெனக் கோஷமிட்டனர். ”ரஜினி சொன்ன ‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’ என்கிற வாசகத்தை டி ஷர்ட்டில் பொறித்து அதையே அணிந்து 120 நாட்களுக்கு மேல் மக்கள் முன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ரஜினி வந்தால் மட்டுமே மாற்றம் வரும். அவர் அரசியலுக்கு வராவிட்டால் அவர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்போம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரளும் நிகழ்வு தற்போது தொடங்கியுள்ளது. இதேபோன்ற போஸ்டர்கள் பிற மாவட்டங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author