


தமிழகத்தில் அரசியல் மிகவும் கடினமான ஆட்டம். உங்களுக்கெல்லாம் அது வேண்டாம். நீங்கள் மென்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் திரைப்பட கலைஞன். அமைதியாக இருங்கள். கெஞ்சிக் கேட்கிறேன் நான், வேண்டாம் என ரஜினிக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அரசியலுக்கு வருவதாக 2017-ல் தெரிவித்த நடிகர் ரஜினி மூன்றாண்டுகளாக மக்கள் மன்றத்தை அமைத்து அவ்வப்போது அரசியல் பிரவேச அறிக்கை வெளியிட்டு வந்தார். கொரோனா தொற்று அதிகமானதால் சென்ற ஆறு மாதமாக பொதுவெளிகளில் வராமல் வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் தனது பெயரில் வெளியான அறிக்கையை நான் வெளியிடவில்லை என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்தார். கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத இந்த சூழ்நிலையில், பொதுவெளியில் வருவது பாதுகாப்பானது அல்ல என மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை கூறியதாகப் பதிவிட்டுள்ளது மட்டும் சரியான தகவல் என்று ரஜினி அதில் தெரிவித்துள்ளார்.. தனது இயக்க நிர்வாகிகளுடன் பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பிரவேசம் குறித்து முடிவு எடுப்பதாகவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தனது உடல் நலன் கருதி ரஜினி, அரசியலுக்கு வரவேண்டாம் என்று திருமாவளவன் இன்று காலையில் பேட்டி அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமானும் அதேபோன்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.



சென்னை வலசரவாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தேவர் பூஜை கொண்டாடிய பின்பு தமிழக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறியதாவது: “என்னை விட நீங்கள் (நடிகர் ரஜினி) மூத்தவர். சிறந்த திரைப்பட கலைஞர். உங்களைப் பார்த்து நாங்கள் கைதட்டி விசிலடித்து வந்தவர்கள். ஆனால், இந்த இடத்தில் (தமிழக அரசியலில்) நான் உங்களை விட மூத்தவன். நடிகர் கமல்ஹாசனைவிட மூத்தவன். அரசியல் மிகவும் கடினமான ஒரு ஆட்டம். உங்களுக்கெல்லாம் அது வேண்டாம். நீங்கள் மென்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு திரைப்பட கலைஞன். அமைதியாக இருங்கள். எதையாவது சொல்ல வேண்டுமா? பேட்டியில் சொல்லுங்கள். அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். பயிற்சி கொடுங்கள். நாங்கள் அரசியல் திடலில் விளையாடுகிறோம். அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் இப்போதும் கெஞ்சிக் கேட்கிறேன். வேண்டாம். நீங்கள் அமைதியாக இருங்கள். உங்கள் நலனுக்காகத்தான் சொல்கிறேன்”. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
Eppa rajini naan vangura 3% votula manna potturatha. En pilaippa kedukkathe