


இந்தியாவின் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ என்ற சட்டப்பிரிவை பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததுடன், யூனியன் பிரதேசமாகவும் மாற்றியது. அதற்கு முன்பு வரை அங்கு அசையா சொத்துக்களை இந்திய நாட்டின் வெளி மாநிலத்து நபர்கள் வாங்க முடியாத நிலை இருந்தது.



தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அல்லாத மற்ற மாநில இந்திய குடிமகன்களும் அங்கு நிலம் வாங்கும் விதத்தில் 26 சட்டங்களை ரத்து செய்தும் அதனை மாற்றம் செய்தும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, விவசாய நிலம், மருத்துவமனை மற்றும் கல்வி தவிர்த்து வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
Spot on with this write-up, I truly suppose this website needs way more consideration. I’ll most likely be once more to learn far more, thanks for that info.