


சென்ற 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் டிரம்பை விட அதிக வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எலக்டோரல் காலேஜ் (Eelectoral College) எனப்படும் தேர்வுக்குழுவில் 77 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இதுகுறித்த அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி கிளின்டன், 2016 ஆம் ஆண்டின் தேர்தலில் தனக்கு எதிராக தவறான பிரசாரம் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.



தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் அந்த தேர்தல் முடிவை தன்னிடமிருந்து திருடி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னைப்பற்றி ரஷ்ய ஊடகங்கள் தவறான பிரசாரம் மேற்கொண்டதால் டிரம்புக்கு வாக்களிக்காதவர்கள் வீட்டிலேயே இருக்கவோ அல்லது மூன்றாம் தரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவோ தூண்டப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.



கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தன்னால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்றும், தற்போதைய அதிபர் டிரம்பின் ஆட்சி சட்டவிரோத போக்கு ஆட்சி என்றும் இந்த நான்கு ஆண்டுகள் கடந்து அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றது.
My brother recommended I might like this website. He was totally right. This post actually made my day. You cann’t imagine just how much time I had spent for this info! Thanks!