தமிழகம் உள்பட வரப்போகும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. புது டில்லியில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார்.
தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெறும், தமிழகத்துக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்று வெளியாக உள்ளது.
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், இன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை புது தில்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Legislative Assembly election date announced this evening !!!
The date of the forthcoming 5 state assembly elections including Tamil Nadu is to be announced this evening. Chief Election Commissioner Sunil Arora will unveil the election schedule at a press conference in New Delhi at 4.30 pm today.
Information on when the Assembly elections will be held in five states including Tamil Nadu, Assam, Pondicherry, West Bengal and Kerala and how many phases the elections are to be held for Tamil Nadu has been released today.
With the election date announced this evening, the rules of conduct will come into effect from this evening. The Election Commission has announced the date of the Tamil Nadu Assembly elections in New Delhi at 4.30 pm today.