இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தின் சிந்தகர்பூர் கிராமத்தில் மின்சார கம்ப பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கி மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சீரமைக்கும் பணிகளை செய்து வந்தனர்.

Snake in youth jeans, overcoming scenes after 7 hours of struggle

அப்போது திடீரென பாம்பு ஒன்று லவ்லேஷ் என்ற தொழிலாளியின் பேண்ட்டிற்குள் புகுந்துள்ளது. மேலும் அவர் அசைந்தால் பாம்பு எங்கு அதில் கடித்துவிடுமோ என்ற பயத்தில் சுமார் ஏழு மணி நேரம் அங்கிருந்த தூணை பிடித்தவாறு அசையாமல் மரம்போல் நின்று கொண்டிருந்தார்.

Snake in youth jeans, overcoming scenes after 7 hours of struggle

காலை விடிந்தவுடன் உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடிக்கும் நபர் வரவழைக்கப்பட்டார். பாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கொஞ்ச கொஞ்சமாக கிழித்து பாம்பை வெளியே கொண்டு வர மிக போராடினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது.

Snake in youth jeans, overcoming scenes after 7 hours of struggle

இதற்கிடையே இளைஞரின் பேண்ட்டில் பாம்பு புகுந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கிராம மக்கள் அந்த இடத்தில் ஒன்று திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1