


சென்ற வருட பிற்பகுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்து பின்னர் இவ் வருட மார்ச் மாதத்திலிருந்து உலகை உலுக்கி வருகிறது கொரோனா வைரஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் தாக்கம் குறைந்திருந்த போதிலும் தற்போது மீண்டும் உலக நாடுகளில் பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.



இந்த நிலையில் அமெரிக்காவின் MIT என்ற நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் செயற்பாடுகளை கட்டுபடுத்தும் நோக்கில் புதிய வகை முகக்கவசம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னர் பயன்பாட்டில் உள்ள முகக்கவச வகைகள் கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளை வடிகட்டும் ஆற்றல் கொண்டனவாக மட்டுமே இருந்தன.



ஆனால் இந்த புதிய வகை முகக்கவசம் ஆனது வெப்பநிலையை உற்பத்தி செய்து கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளின் பாதிப்பை முடக்கவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த முகக்கவசத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டு வருவதுடன், விரைவில் அசல் முகக்கவசம் தாயரிக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுறது.
Good entertaining and informative take on a confusing period of European history. More please. Bethany Amory Magdalena