


பெண்களைப் பாலியல் தொழிலுக்காக கடத்தலில் ஈடுபடுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கேத் ரானியர் என்ற போலிப் பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரபரப்பான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது.



இதனை குறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவைச் சேர்ந்த 60 வயதான கேத் ரானியர் என்ற போலிப் பாதிரியார் NXIVM என்ற அமைப்பை நடத்தி வந்தார். இதில் பெரும் பணக்காரர்களும், பிரபலமானவர்களும் அந்த அமைப்புக்கு நிதி அளித்து வந்தனர். இந்த நிலையில் கேத் ரானியர் தனது அமைப்பில் சேர்ந்த பெண்களைப் பாலியல் பாலியல் தொழிலுக்காக கடத்தலில் ஈடுபடுத்தி அவர்களது உடலில் தன் பெயரை அச்சிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.



இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நிக்கோலஸ் கரப்சிஸ், கேத் ரானியரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேத் ரானியரின் குற்றம் இரக்கமற்ற செயல் என்று அந்த நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் குற்றமற்றவர் என்றும் நிரபராதி என்றும் கேத் ரானியர் தெரிவித்துள்ளார்.
I absolutely love your blog and find most of your post’s to be precisely what I’m looking for. Do you offer guest writers to write content to suit your needs? I wouldn’t mind creating a post or elaborating on many of the subjects you write in relation to here. Again, awesome web log!