இந்தியாவில் ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட இந்நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Ban on pubg app in India

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்து சென்ற ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஆப்களும் அடங்கும்.

Ban on pubg app in India

இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட ஆப்களுடன் தொடர்புடைய மேலும் 118 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல இணையதள விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 ஆப்களுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Ban on pubg app in India