


இந்திய எல்லையானா லடாக்கில் இருக்கும் மலை பகுதிகளில் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மிக திறமையாக சீனாவின் சென்சார்களில் சிக்காமல் இந்திய வீரர்கள் லடாக் மலை பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.



லடாக்கில் பதற்றம் நிலவி வரும் இந்நிலையில் அங்கு தற்போது இந்தியா – சீனா இடையே நிலம் பிடிக்கும் போட்டி நடந்து வருகிறது. லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் உரிமை கோரும் பகுதிகள் பல இருக்கிறது. இங்கு தற்போது யார் வேகமாக சென்று இடம் பிடிப்பது என்ற போட்டி நிலவி வருகிறது. அதிலும் லடாக்கில் இருக்கும் மலை பகுதிகள், ஹைட்ஸ் என்று பொது பெயரில் அழைக்கப்படும் பல சிகரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சிகரங்களை கைப்பற்றினால் போர் வரும் சமயத்தில் அது வசதியாக இருக்கும் என்று இரண்டு நாடுகளும் அதி தீவிரமாக முயன்று வருகிறது.



இந்த நிலையில்தான் இந்தியா சென்ற இரவு லடாக்கில் இருக்கும் மலை பகுதிகள் பலவற்றில் தங்கள் வீரர்களை களமிறக்கியது. செசூல் செக்டார் அருகே இருக்கும் மலை பகுதிகளில் இந்தியா, படைகளை களமிறக்கி இருக்கிறது. லே பகுதியிலும் மற்றும் டெப்சாங் பகுதியிலும் இந்தியா, படைகளை களமிறக்கி உள்ளது. சீனா அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் முன்பு வேகமாக சென்று, இந்தியா அங்கே அந்த இடங்களை கைபற்றியுள்ளது.



இந்த பகுதிகளை இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகிறது. இதனால் இங்கு முன்பில் இருந்தே சீனா தனது நவீன கேமராக்கள், மோஷன் சென்சார்களை வைத்துள்ளது. இந்திய வீரர்கள் அந்த வழியே லேசாக கிராஸ் செய்தால் கூட, கண்டுபிடிக்கும் அளவிற்கு சென்சார்களை சீனா வைத்துள்ளது. இந்திய வீரர்களை கண்காணிக்கும் வகையிலும், இந்தியாவிற்கு முன்பு அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி பல ஏற்பாடுகளை செய்துள்ளது.






இப்படிப்பட்ட இந்த நிலையில்தான் சீனாவின் சென்சார் கேமராக்களில் சிக்காமல் இந்திய வீரர்கள் பாங்காங் திசோ அருகே தெற்கு பகுதியில் இருக்கும் மலைகளை கையாகப்படுத்தியுள்ளனர். மோஷன் சென்சார் கேமரா என எதிலும் சிக்காமல் இந்திய வீரர்கள் அங்கே சென்றுள்ளனர். அந்த இடத்தை ஆக்கிரமித்து வந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் ஏற்கனவே அங்கு இருப்பதை பார்த்து பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்படி இந்திய வீரர்கள் சென்சாரில் சிக்காமல் இங்கு வந்தனர் என்று சீன வீரர்கள் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதோடு இந்திய வீரர்கள் அந்த பகுதியை கையாகபடுத்தியது மட்டுமல்லாமல், அங்கிருந்த சீன சென்சார் கேமராக்களை அகற்றியுள்ளனர். அதனால் இனிமேல் இந்திய வீரர்களை சீனா கண்காணிக்க இயலாது. இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இந்த மலைப்பகுதிகள் இந்தியாவிற்கு பெரும் சாதகமாக இருக்கும். இத்னால் இந்தியா மேலும் சிறப்பாக போர் திட்டங்களை வகுக்க முடியும்.