


ஒருவர் தன் வீட்டை விட்டு விறுவிறுவென வீட்டு வாசலை தாண்டி வந்து கொண்டு இருக்கிறார், வழியில் நிற்பவர்கள் எல்லாம் சலாம் போடுகிறார்கள் அவரோ அனைவருக்கும் வணக்கம் சொல்லிய படி நடக்கிறார், நடந்து சென்ற அவர் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் அவரது வயிற்றை துளைத்தது துப்பாக்கி குண்டுகள், அவரது அருகிலிருந்து ஏழே அடி தூரம் நின்ற அவரது பாதுகாப்பு அதிகரி பியாந்த் சிங்கின் கையில் இருந்த கைதுப்பாக்கி குண்டுகள்தான் அவரது அடிவயிற்றை பதம் பார்த்தது.



ஆரஞ்சு நிற கதர் புடவை அணிந்து தன் ஒருபுரத்தோளில் ஒரு துணி பையை மாட்டிக்கொண்டு கம்பீரமாக நடந்து வந்த அந்த பெண்மணி அப்படியே தரையில் விழுந்தார். அதன் பிறகும் விடவில்லை அவர்கள், மறுபக்கத்தில் நின்ற இன்னொரு மெய்காப்பாளர் சத்வந்த் சிங், தான் வைத்து இருந்த தாம்சன் ஸ்டன்ங்கன் வகை எந்திர துப்பாக்கியால் கொடூரமாக வெறித்தனமாக விழுந்து கிடந்த அந்த பெண்மணி மீது சரமாரிய சுட்டார். அந்த இரும்பு பெண்மணியின் உடல் இரத்த வெள்ளத்தில் சல்லடையா குண்டுகளால் துளைக்கப்பட்டு கீழேகிடந்தார். அந்த பெண்மணி தான் இந்தியாவின் இரும்பு மங்கை என்று அழைக்க படுகிற பாரதப்பிரதமர் அம்மையார் இந்திராகாந்தி.



இந்திராவுடன் வந்த அதிகாரிகளும் மற்ற பாதுகாப்பு படை வீரர்களும் கவனிப்பதற்குள், அவர்கள் இருவரும் “நாங்கள் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டோம் இனி நீங்கள் என்ன எங்களை செய்ய வேண்டுமோ அதை செய்துகொள்ளுங்கள் என்று தாங்கள் கையில் வைத்து இருந்த துப்பாக்கிகளை தூக்கி கீழே போட்டு அங்கேயே நின்றனர். குண்டு சத்தம் மற்றவர்களின் காதுகளை துளைத்த மருகணமே இந்திராவின் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் அலறி அடித்து ஓடி வெளியில் வந்தனர்.



உடனேயே, இந்திரா அதிகமா பயன்படுத்தும் வெண்மைநிற அம்பாசிடர் ரக வாகனம் வந்து நின்றது. உடனே இந்திரா அந்த வாகனத்தின் பின்பக்க இருக்கையில் தூக்கி அமர்த்தபட்டார். இந்திராவின் மருமகள் சோனியாகாந்தி அவருடன் காரில் இருந்து அவரை தாங்கிபிடிக்க வாகனம் விரைந்தது டில்லி எய்ம்ஸ் மருதுவமனை நோக்கி. அவசர வார்டில் அவசர அவசரமா அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திராவின் இதையத்தை இயங்க வைக்க பேஸ்மேக்கர் எனற செயற்கை கருவி பொருத்தப்பட்டது. அவரது உடலை பதம் பார்த்த முப்பத்திமூன்று துப்பாக்கி குண்டுகளில் முப்பது குண்டுகள் இந்திராவின் உடலை துளைத்து இருந்தது ஆனால் ஏழு குண்டுகள் அவர் உடலை விட்டு வெளியேறாமல் அவரது உடலுக்குள்ளேயே தங்கிவிட்டது மீத குண்டுகள் அவரது உடலை துளைத்துக்கொண்டு வெளியேறி சென்றுள்ளது. உயர்மட்ட மருத்துவர் குழுக்கள் இந்திராவின் உயிரை காப்பாற்ற போராடி இறுதியில் தோல்வியே கண்டனர், இந்திராவின் உயிர் (அக்டோபர் மாதம் 1984 ஆம் ஆண்டு 31 ஆம் தேதி) அன்று 2 மணி 25 நிமடங்களில் பிரிந்து விட்டதாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர்.



ஆனால் அதிகாரபூர்வ அரசு அறிவிப்பு எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. அந்த சம்யத்தில் ஏமன் நாட்டு சுற்று பயணத்தில் இருந்த அன்றைய குடியரசு தலைவர் ஜெயில் சிங் இந்திராவின் செய்தி அறிந்து உடனே தன் பயணத்தை முடித்து நாடு திரும்பினார். அன்றைய அமைச்சரவையில் இந்திராவின் அடுத்த இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியும் இந்திராவின் மகன் இராஜிவ்காந்தியும் தேர்தல் பரப்புரைக்காக மேற்கு வங்க மாநிலம் சென்றிருந்தனர். உடனடியாக காவலர்கள் வழியாக செய்தி அனுப்பபட்டது இருவருக்கும். உடனே அவர்கள் இருவரும் டில்லி விரைந்து சென்றனர்.



அதே சமயத்தில் அந்த இரு கொலையாளிகளையும் இந்தோ திபேத் எல்லை படையைச் சேர்ந்த தர்செம் ஜம்வால் மற்றும் சரண் தாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அவர்கள் பிடிக்க பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டு தீவிர விசாரணை, அவர்கள் இருவரிடத்திலும் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பெரும் ஆத்திரத்துடன் இருந்த மற்ற அதிகாரிகள் சீக்கியர்களை பற்றியும் சீக்கிய மதத்தை பற்றியும் மிக மோசமான வார்தைகளால், அவர்கள் இருவரையும் தாக்கி பேசியுள்ளனர். திடீரெனறு ஒரு அதிகாரி சத்வந்த் சிங்கின் தலையில் இருந்த தலைப்பாகையை இழுக்க, அதைக்கண்ட பியாந்த் சிங் தலைப்பாகையை இழுத்த அந்த அதிகரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதே சமயத்தில் சத்வந்த் சிங் தன் அருகில் நின்ற அதிகாரியின் துப்பாக்கியை எடுக்க முயன்ற மறுகணத்தில் சுற்றி நின்ற காவல் அதிகாரிகள் அந்த இரு இந்திரா கொலையாளிகளையும் தாங்கள் தங்கள் கைகளில் வதிருந்த துப்பாக்கிகளால் சரமரியாக சுட்டனர். சுடுபட்ட பியாந்த் சிங் அந்த இடதிலேயே மரணமடைந்தார். துப்பாக்கி சூட்டால் படுகாயம் அடைந்த சத்வந்த் சிங் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.



ஆனால் இறந்துபோன பியந்த் சிங் இந்திராவின் மிக நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் அதனால்தான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்திராவின் மெய்க்காப்பாளரா பணி செய்து வந்தார். இவ்வளவு நம்பிக்கையும் விசுவாசத்தையும் உதறிவிட்டு இந்திராவை கொலை செய்ய நினைத்த எண்ணம் ஒரே நாளில் உருவானது இல்லை அவர்களுக்கு. எந்த ஒரு முன் விரோதத்திலும் இது நடந்து விடவில்லை. அவர்களுக்குள் கொந்தளித்து கொண்டு இருந்த மத உணர்வுகளும், அவர்கள் இருவருக்கும் வெளியில் இருந்து அவர்கள் மூளைக்கு ஊட்ட பட்ட தீய எண்ணங்களுமே அந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நிறைவேறுவதற்கு காரணமாக அமைந்தது.
— மிக விரைவில் பகுதி – 2
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புறத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும், எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com
Can I simply say what a reduction to search out somebody who really is aware of what theyre talking about on the internet. You definitely know the best way to carry a difficulty to light and make it important. More folks have to learn this and understand this aspect of the story. I cant imagine youre not more in style since you positively have the gift.