+1
+1
+1
+1
+1
+1
+1
Vivo V20 Pro 5G launched in India !!!
Kiruba Store - Online Shopping Store in India

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த Vivo V20 Pro 5G இந்தியாவிலும் அறிமுகமாகியது. Vivo V20 Pro 5G கைபேசி மாடலானது Vivo V20 மற்றும் Vivo V20 SE வரிசையில் வெளியாகும் அடுத்த போனாகும். Qualcomm Snapdragon 765G புராசெஸ்சர், மூன்று வகையான பின்பக்க கேமராக்கள், இரண்டு முன்பக்க கேமரா என பல சிறந்த வசதிகளுடன் இந்த கைபேசி வெளியாகியுள்ளது.

Vivo V20 Pro 5G launched in India !!!

இது தாய்லாந்து நாட்டில் சென்ற செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் இது இந்தியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் Vivo V20 Pro 5G-யின் விலையானது ரூ.29,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 8GB RAM + 128GB நினைவாக அளவைக் கொண்டது. இந்த கைபேசி அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் ஆகிய பல இணையதளங்களில் கிடைக்கிறது. மேலும் ஐசி.ஐசி.ஐ வங்கி கடன்அட்டை மற்றும் சேமிப்பு அட்டைகள் மூலம் வாங்கினால் ரூபாய்.2000-வரை தள்ளுபடி கிடைக்கும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் மட்டுமின்றி கைபேசி விற்பனை கடைகளிலும் இந்த கைபேசி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vivo V20 Pro 5G launched in India !!!

Vivo V20 Pro 5G கபேசியானது இரண்டு சிம் அட்டை போடும் வசதி கொண்டது. மேலும் 6.44 இஞ்ச் அளவு கொண்ட காட்சி அமைப்பை கொண்டதாக உள்ளது. ஏற்கெனவே கூறியதுபோல இது Qualcomm Snapdragon 765G செயலியை கொண்டதாக உள்ளது. பின்பக்கம், 64 மெகா பிக்ஸல் + 8மெகா பிக்ஸல் + 2 மெகா பிக்ஸல் ஆகிய மூன்று கேமராக்கள் அதில் அடங்கி உள்ளன.

Vivo V20 Pro 5G launched in India !!!
Aztec Technologies - Domain and Hosting Company

முன்பக்கத்தை பொருத்தவரை செல்ஃபிக்காக 44 மெகா பிக்ஸல் + 8 மெகா பிக்ஸல் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. 8GB மற்றும் 128GB நினைவங்களை கொண்ட கைபேசி மாடலாக இது உள்ளது. இதனால் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு சிறப்பானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மின்கலத்தை(Battery) பொருத்தவரை 4000mAh ஆக உள்ளது. 1080×2400 pixels ரிஷோலுசன் மற்றும் ஆண்டிராய்டு(Android) 11 OS கொடுக்கப்பட்டுள்ளது.

Vivo V20 Pro 5G launched in India !!!

OnePlus Nord செல்போனுக்கு நேரடி போட்டியாக அறிவிக்கப்பட்ட Vivo V20 Pro 5G பெரிய எதிர்பார்ப்புடன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த மாடலின் சாதக, பாதங்கள் என்ன? பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் அதை வாங்கிய பயனர்கள் சொல்லுமாவ்ரை பொருத்திருக்க வேண்டியாதுதான்!!!.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1