Online classes from 3rd in Government Art Colleges

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் 3-ஆம் தேதி அதாவது நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

Online classes from 3rd in Government Art Colleges

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Online classes from 3rd in Government Art Colleges

இந்நிலையில், மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த கல்லூரிகளில் இளங்கலை 2 மற்றும் 3-ஆம் ஆண்டு மற்றும் முதுகலை 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.