N95 Face Masks Are Dangerous To Health

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் என்95 ஃபேஸ் மஸ்குகள் உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் எனறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது.

N95 Face Masks Are Dangerous To Health

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் கொண்டு கைகளை நன்கு சுத்தப்படுத்த வேண்டும், குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து நாடுகளும், மாநிலங்களும் மற்றும் மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.

N95 Face Masks Are Dangerous To Health

இந்த நிலையில் அப்படி அணியும் முகக்கவசத்திலும் ஆபத்து இருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின், சுகாதார சேவைகளின் பொது டைரக்டர் ராஜூவ் கர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

N95 Face Masks Are Dangerous To Health

மேலும் என்95 ஃபேஸ் மஸ்குகளில், சுவாச வால்வுகள் பொருத்தப்பட்ட மாஸ்க் அணிவதால், வைரஸ் எளிதில் வெளியேறும் என்றும், அதனால் வைரஸ் கிருமியை தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

N95 Face Masks Are Dangerous To Health

அதனால் மக்கள் அனைவரும் அவர்களுக்கு பொருத்தமான முகக்கவசங்களை வாங்கி அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்களை அணியலாம் என ராஜூவ் கர்க் தெரிவித்துள்ளார்.

N95 Face Masks Are Dangerous To Health

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை நாடு முழுவதும் உள்ளது. அதே போன்று, எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் வால்வ் வைத்த என்95 முகக்கவசங்களை அணிய வேண்டாம் என இந்திய மத்திய சுகாதாரத்துறை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.