+1
+1
+1
+1
+1
+1
+1
Why was Pluto Planet removed
Kiruba Store - Online Shopping Store in India

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம். இன்று ப்ளூட்டோ (Pluto Planet) என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம்.

வரலாற்று சிறப்புமிக்க இடம்.

நிறைய எரிக்கல் , துணை கோள்கள் , நம்மை போல் உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் சூரிய குடும்பங்கள் , இன்னும் இங்கு நம்மவர்கள் ஆற்றி உள்ள சாதனைகள் கணக்கில் அடங்காது , அப்படிப்பட்ட சிறப்புமிக்க இடத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா என்ன?, இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் ஜவ்வாது மலைகளில் காவலூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இதனை நமது பிரதமர்.திரு. இராஜீவ் காந்தி யால் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கூட Northern Hemisphere-ஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியுமாம். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

Aztec Technologies - Domain and Hosting Company

தெற்கு அரைக்கோளமில் துல்லியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும். மற்றுமொரு முக்கியமான அம்சம், இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி (தெளிந்த வானம் ) கிடைக்கின்றன. இந்த தொலை நோக்கி யின் கண்ணாடி( லென்ஸ் ) 90 அங்குலம் மீட்டர் விட்டம் , உங்களால் நம்ப முடிகிறதா என்ன?, இன்னும் ஆச்சரியமான விஷயம் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது. இங்கு 6 அங்குலம், 10 அங்குலம் , 13 அங்குலம் , 18 அங்குலம் , 24 அங்குலம் , 30 அங்குலம் , 40 அங்குலம் , 48 அங்குலம் மற்றும் 90 அங்குலம் தொலைநோக்கி பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 அங்குலம் தொலைநோக்கி ஜெர்மன்-ரஷ்யா-இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாலும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள். அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும். உங்கள் ப்ரியமான பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புற கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு. இங்கு அருகில் பீமா நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, ஆங்கிலேயர்கள் கட்டிய கண்ணாடி மாளிகை, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , உங்கள் கண்களுக்கு மிருகங்கள் கண்களில் புலப்படலாம். கூடுதல் தகவலாக #தமிழ்நாடு_சுற்றுலாத்துறையின் எட்டு அறைகள் கொண்ட தங்கும் விடுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமனாமரத்தூர் அவர்கள் கட்டுபாட்டில் உள்ளது தங்கும் விடுதி (முன்பதிவிற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் ஜமூனமரத்தூர் அவர்களை தொடர்புகொள்ளவும் 0418-1235245) இங்கு மற்ற தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா உள்ளது. உணவிற்கு ஜமூனாமத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்கு தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்த்தியான காட்டு பகுதி ஆதலால் டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் மிகவும் முக்கியமானது.

புளூட்டோ, என்பது கதிரவ அமைப்பில் இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[lower-alpha 6] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.

கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[2] கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள் கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.

நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும். தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’. புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது. எனவே தான் புளூட்டோ கோள் என்ற தகுதியை இழந்தது

இந்த இடத்திற்கு செல்ல: 1. பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர். 2.சென்னை-வேலூர்-வாணியம்பாடி – ஆலங்காயம்-காவலூர் , 3. சேலம்- அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – ஆலங்காயம்-காவலூர் 4.பாண்டிச்சேரி – திருவண்ணாமலை – போளூர் – ஜமூனாமத்தூர் – காவலூர்.

Why was Pluto Planet removed ???

Located in the Thiruvannamalai district, it is the largest long-distance aerospace research center in Asia. This place is the main reason why the ninth planet Pluto (Pluto Planet) was removed from our textbook today.

Historically significant place.

Lots of eruptions, asteroids, solar systems suspected to be inhabited by creatures like us, yet the achievements of our people here do not count, what do you want to know about such a special place ?, It is located in the small town of Kavalur in the Javadu hills on the border of Vellore-Thiruvannamalai district. This was done by our Prime Minister. Opened by Rajiv Gandhi. Even at NASA, the US space research center, only the Northern Hemisphere can be explored. But the most important feature of this place is that it is possible to explore the northern and southern hemispheres from these areas.

Even Americans should come here to do accurate research in the Southern Hemisphere. Another important feature is that from here only open air space (clear sky) is available for more than 300 days. The lens of this telescope (lens) is 90 inches in diameter, can you believe it ?, even more amazing is that it was made entirely by Indians especially in Tamil Nadu. There are 6-inch, 10-inch, 13-inch, 18-inch, 24-inch, 30-inch, 40-inch, 48-inch and 90-inch telescopes in use. This 48 inch telescope is designed with German-Russian-Indian joint technology.

Words and letters cannot describe how our country has left its mark on the world stage with the discoveries made here. Adults and minors will be admitted here every Saturday from 5:00 pm onwards. They will show your eyes all the planets, glorious stars, planets, asteroids except Earth. It is a rare opportunity for your beloved children to show their outside eyes what they read only in school books. Nearby are Bhima Falls, a children’s park, a boat ride, a house inhabited by Stone Age people, a glass house built by the British, a natural medical park, natural mountain honey, jackfruit, guava and Ram Sita fruit.

If you are lucky, you can see the beasts in front of your eyes. For more information #TamilNadu_Tourism Eight Rooms Hostel is under the control of Regional Development Officer Jamanamarathur Hostel (Contact Regional Development Office Jamunamarathur for reservations 0418-1235245) There are no other hostels, Forest Department and Travels Bungalow. Just go to Jamunamathur and Alangayam for food. This is a very dense forest area so equipment like torch light is very important.

Pluto is the second largest asteroid in the solar system and the tenth largest asteroid to orbit the Sun directly. It was predicted by Percival Lowell in 1915 and discovered in 1930 by Clyde Domba. Pluto was initially thought to be the ninth planet of the Sun. It was classified as an asteroid and plutoid because it was discovered to be one of many large objects in the Kuiper belt outside Neptune. [Lower-alpha 6] Pluto has five moons, including a large moon called Charon.

Like other celestial bodies in the Kuiper belt, Pluto contains rocks, and glaciers. The Earth’s moon is one-sixth the mass and one-third the volume. It has the highest oblique orbital deflection (30 to 49 astronomical units (4.4–7.4 billion km) from the Sun). Thus Pluto gets closer to the Sun more often than Neptune. As of 2011, Pluto was 32.1 nautical miles from the Sun. [2]

Must have sufficient mass to reach stagnant water equilibrium (almost spherical shape). ‘Must have removed recent objects’ in its orbital environment. Although Pluto and similar asteroids have reached the first two conditions, they cannot be called a planet because they have not reached the third ‘deletion of nearby objects’ condition. That is why Pluto lost its status as a planet

Go to: 1. Bangalore-Tirupati-Alangayam-Kavalur. 2. Chennai-Vellore-Vaniyambadi-Alangayam-Kavalur, 3. Salem-Aroor-Uthangarai-Tirupati-Alangayam-Kavalur 4. Pondicherry-Thiruvannamalai-Polur-Jamunamathur-Kavalur.

For More informative Videos go to Ariviyalpuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author