+1
+1
+1
+1
+1
+1
+1
Discovered the largest gold treasure in Turkey!!!
Aztec Technologies - Domain and Hosting Company

துருக்கி நாட்டில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடைய மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி தங்க மதிப்பை விட அதிகம் என்பது பெரும் ஆச்சரியம்.

Discovered the largest gold treasure in Turkey!!!

இந்த தங்கத்தின் மதிப்ப சுமார் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாய்-க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை சுமார் 99-டன் ஆகும். கொரோனா பேரிடர் காலத்திலும் இப்படி ஓர் அரிய வரவு துருக்கி நாட்டுக்கு வந்துள்ளது பெரும் அதிர்ஸிட்டமாக அமைந்துள்ளது. தங்கப்புதையல் கிடைத்ததை அடுத்து, துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.

Marutham Physio Theraphy Clicnic - Chennai
Discovered the largest gold treasure in Turkey!!!

துருக்கியில், உரம் உற்பத்தி நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சென்ற 2018-ஆம் ஆண்டில் இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 77 ஆயிரம் கோடி டாலராகும்.

Discovered the largest gold treasure in Turkey!!!

தங்காப்புதையல் கண்டுபிடிக்கப்பட்ட இந்நிலையில், உர நிறுவனத்தின் பங்கு விலையும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. அண்மையில், 38-டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம், ஒரு பெரிய சாதனையை துருக்கி நாடானது படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் உற்பத்தி அங்கு 100-டன்-னாக உயரும் எனறு, அந்த நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கைவள அமைச்சர் பாத்தி டான்மெஸ் அறிவித்துள்ளார்.

Annai Vasantha Developers - Chennai
Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1