+1
+1
+1
+1
+1
+1
+1
Aztec Technologies - Domain and Hosting Company

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த “அசுரன்” திரைப்படம் தேர்வாகி உள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) சென்ற 1952-ஆம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Tamil film Asuran and Honey selected for Indian International Film Festival !!!

டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Marutham Physio Theraphy Clicnic - Chennai
Tamil film Asuran and Honey selected for Indian International Film Festival !!!

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த “அசுரன்” திரைப்படம் தேர்வாகியுள்ளது. அதனுடன் “தேன்” என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1