+1
+1
+1
+1
+1
+1
+1
Puravi storm is approaching - deserted Kanyakumari
Kiruba Store - Online Shopping Store in India

புரவி புயல் எதிரொலியாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் தற்காலிக தடுப்புகள் கொண்டு மூடப்பட்டது. இதனால் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியே வெறிச்சோடி காணப்படுகிறது.

Puravi storm is approaching - deserted Kanyakumari

தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Puravi storm is approaching - deserted Kanyakumari

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரிக்கு 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று காலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Puravi storm is approaching - deserted Kanyakumari
Aztec Technologies - Domain and Hosting Company

மேலும் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலைகள் தற்காலிக தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு, இங்குவரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, தற்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எவரும் இன்றி பார்பதற்கு வெறிச்சோடி காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1