+1
+1
+1
+1
+1
+1
+1

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழைதோட்டத்தில் திருநங்கையுடன் குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். குழித்துறையில் குடித்துவிட்டு ஆட்டம் போடும் நபர்களின் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.

இதில் குடிகாரன்கள், காலையிலேயே மது வாங்கி கொண்டு, இந்த வாழை தோட்டத்தில் புகுந்து விடுகிறார்கள். அங்கேயே குடிப்பதும், போதையில் விழுந்து கிடப்பதுமக செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த வாழைத் தோட்டத்தில் 55 வயது மிக்க நபர் ஒருவர் செத்து கிடந்தார். இவர் எப்படி செத்தார் என்றே தெரியவில்லை.. அதனால் அந்த மர்ம இறப்பை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தோட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டாரே, வழக்கு நடந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல், மறுபடியும் குடிமகன்கள் அதே தோட்டத்தில் கும்மாளம் அடித்து வருகின்றார்கள். இன்றும் அப்படித்தான் வாழை தோட்டத்திற்குள் குடிமகன்கள் குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு திருநங்கை உள்ளே புகுந்துவிட்டார்.. உள்ளே வந்தவர், குடிமகன்கள் குடித்து கொண்டிருந்த மதுவை புடுங்கி மடக் மடக் என குடித்துவிட்டார். ஆனால் குடிமகன்களோ மது போனால் என்ன என்று அந்த திருநங்கையுடன் ஜாலியாக ஆட்டம், பாட்டத்தில் இறங்கிவிட்டனர். இந்த கூத்தை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் முகம் சுளிப்பதுடன், அதை பற்றி கவலை தெரிவித்தும் வருகின்றனர். இந்த பகுதியில் இது போன்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருவதால், காவல் துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி, இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதுடன், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

+1
+1
+1
+1
+1
+1
+1