


பூமியிலுள்ள அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் குமரிக்கண்டத்தில்தான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.



பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் மறைந்தது. நீரில் மூழ்கிய நகரம் என்று பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக்கண்டமும் அழிந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிலர் இந்த குமரிக்கண்டம் வெறும் கற்பனைதான் என்று கூறுகிறார்கள். இந்த பதிவில் குமரிக்கண்டம் குறித்த சில ரகசியங்களை பார்க்கலாம். பூமி எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல்பரப்பு மிகவும் வித்தியாசமாக இருந்ததுள்ளது, நமக்கு நன்கு தெரிந்த நாடுகள் கூட முற்றிலும் வேறுபட்ட இடங்களில்தான் இருந்துள்ளன. இன்று நமக்குத் தெரிந்த நாடுகளும், கண்டங்களும் அன்று இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அனைவரும் பாங்கேயா என்ற நிலப்பரப்பில் ஒன்றாக குழுவாக வாழ்ந்து வந்துள்ளனர்.



பூமியின் இந்த மாற்றத்திற்கான காரணம் டெக்டோனிக் தகடுகள் மற்றும் கான்டினென்டல் சறுக்கல்களின் இயக்கங்கள்தான், அவை மலைகள், நீரில் மூழ்கிய நிலங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள் மற்றும் சுனாமி போன்ற பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக்கண்டம் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால நாகரிகம் கடந்த காலத்தில் இருந்தது என்று நம்பப்பட்டு வருகிறது. குமாரிகண்டம் முதன்முதலில் பதினைந்தாம் நூற்றாண்டின், ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பனியுகம் முடிந்த பின்னர் கடல் மட்டம் உயர்ந்து வந்ததால் இந்தியப் பெருங்கடலில் குமரிக்கண்டம் மூழ்கியதாகக் கூறப்பட்டு வருகிறது.



இந்தியாவின் தேசிய கடல்சார் நிறுவனத்தின் ஆராய்ச்சிகளின்படி, 14,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இப்போது இருப்பதை விட 100 மீட்டர் குறைவாக இருந்துள்ளது, மேலும் கடல் மட்டத்தின் உயர்வு குமரிக்கண்டத்தை கடலால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு கண்டம் என்றும், அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து புதிய மொழிகள், இனங்கள் மற்றும் நாகரிகங்களை உருவாக்கியதாக தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர். ஐரோப்பிய அறிஞர்கள் இந்த கண்டத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டுள்ளனர், மேலும் இது மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென்னிந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றும் நம்புக்கின்றனர். குமரிக்கண்டத்தின் கடல்வழிப்பாதை ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை சென்றுள்ளது.



19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய புவியியலாளர் பிலிப் லுட்லி ஸ்க்லேட்டர், லெமூரியா என்ற வார்த்தையை கொண்டு வந்தார், மடகாஸ்கர் லெமர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்ததை அந்த பாதை விளக்குகிறது. தமிழ் தேசியவாதிகள் நம்பியதைப் போலவே ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் ஒரு நிலப்பரப்பின் கோட்பாட்டை அவர் கொண்டு வந்தார். மேலும் அதனுடன் சேர்த்து, தியோசோபிகல் சொசைட்டியின் நிறுவனர் மேடம் பிளேவட்ஸ்கி, நீரில் மூழ்கிய நிலத்தில் வசிப்பவர்களை லெமூரியர்கள் என்று அழைத்தார். புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளின்படி கன்னியாகுமரியில் இருந்து கிட்டதட்ட 7000 மைல் வரை இருந்த நிலப்பரப்பு இயற்கை பேரழிவுகளால் கடலுக்குள் மூழ்கியது.



குமரிக்கண்டத்தை 49 பிரதேசங்களாக பிரித்து பாண்டியர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கோட்பாடுகளில் உள்ள ஒற்றுமை காரணமாக, லெமூரியா மற்றும் குமரிக்கண்டம் இரண்டும் இணைக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக, பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் இந்த இழந்த கண்டத்தின் பின்னால் உள்ள மர்மங்களுக்கு, பதில்களைத் தேடி அலைந்து வருகின்றனர். இது நிரூபிக்கப்பட்டால் அது மனித குலத்தின் வரலாற்றையே மாற்றிவிடும், நமது அறிவு மற்றும் கலாச்சாரம் நிறைந்த பொக்கிஷம் நம் இந்திய பெருங்கடலில் அமைதியாய் உறங்கிகொண்டு இருக்கிறது.
Thank you for the sensible critique. Me and my neighbor were just preparing to do some research about this. We got a grab a book from our local library but I think I learned more from this post. I am very glad to see such excellent info being shared freely out there.