![In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Boy-kidnapping-850x478.jpg)
தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் காலையில் கடத்தப்பட்ட சிறுவன் வாட்ஸப் தகவலால் மாலைக்குள் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
![In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Boy-kidnapping-2-850x478.jpg)
பல்வேறு சமூக பிரச்சினைகள் எழுவதாக பேஸ்புக், வாட்ஸப் போன்றவற்றை பலர் குற்றம் கூறி வந்தாலும், சில சமயங்களில் சமூக வலைதளங்கள் உதவியாகவும் இருந்து வருகின்றது. திருப்பூரை சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
![In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Boy-kidnapping-3-850x478.jpg)
இதுகுறித்து உடனடியாக போலிஸ் நிலையத்தில் புகார் அளித்த காஜா மைதீன் தனது மகன் புகைப்படம் மற்றும் தனது கைபேசி எண்ணை வாட்ஸப்பில் பகிர்ந்து விஷயத்தை கூறியுள்ளார். அதை தொடர்ந்து காஜா மைதீனின் மகன் காணாமல் போன விவகாரம் வேக வேகமாக வாட்ஸப் மூலமாக திருப்பூர் பகுதி முழுவதும் பரவியுள்ளது. மேலும் திருப்பூர் முழுவதும் காவல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த தொடங்கினர்.
![In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled In Tirupur, Tamil Nadu, a boy abduction was reported on WhatsApp and the robbers fled](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Boy-kidnapping-4-850x478.jpg)
இதனால் சிறுவனை கடத்திய கும்பல் பீதியடைந்து திருப்பூர் வடக்கு போலிஸ் நிலையம் அருகே சிறுவனை தூக்கிசென்ற வண்டியிலிருந்து கீழே இறக்கிவிட்டு விட்டு தப்பியுள்ளனர். இதனால் காலையில் காணாமல் போன சிறுவன் வாட்ஸப் பகிர்வால் மாலைக்குள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.