![Actor Sham arrested in Chennai Actor Sham arrested in Chennai](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/sham-3-1-850x478.jpg)
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில், நடிகர் ஷாம்முக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவருடைய வீட்டில் சட்டத்திற்க்கு எதிராக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
![Actor Sham arrested in Chennai Actor Sham arrested in Chennai](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/sham-2-850x478.jpg)
இதனையடுத்து போலீசார் அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்து பார்த்தபோது, நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கண்டறிந்ததனர்.
![Actor Sham arrested in Chennai Actor Sham arrested in Chennai](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/sham-4-1-850x478.jpg)
இதனை அடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுபொல, தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் சட்டத்திற்க்கு புறம்பாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்தி வந்ததும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.