Sunday, March 26 2023
ஹாட் தகவல்கள்
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?
கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் அழகாக மாற்றியது!!!
ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on a planet கட்டுமானத் தொகுதிகள் உள்ளதா?
அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி இறக்கைகளைக் கொண்டவை!
கிறிஸ்டியன் ஹியூஜென்ஸின் குறைபாடுள்ள தொலைநோக்கிகளின் Defective telescope மர்மம் தீர்க்கப்பட்டிருக்கலாம், காரணம் என்ன?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்இந்தியாஉலக அரசியல்சமூகம்சினிமா செய்திகள்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்தொழில்நுட்பம்பொழுதுபோக்கு

சீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்

by அறிவியல்புரம் July 8, 2021
written by அறிவியல்புரம்
Seeman-warns-BJP
Kiruba Store - Online Shopping Store in India

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்ட திருத்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பா.ஜ.க.வினர் மிரட்டினால் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றைமயமாக்கலையும், அதிகாரக்குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத்தம்பி சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது. திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது;

Seeman-warns-BJP

கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன்.

Aztec Technologies - Domain and Hosting Company

அறிவியலுக்கும், அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், ஆபாசமாகப் பேசுவதும், சமூக விரோதி, தேசத்துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென சனநாயக விரோதங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக. தம்பி சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது.

READ ALSO THIS  பனை திருவிழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியினர் | who attended the palm festival 2019

தம்பி சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்; பாஜகவின் ஆட்சிமுறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டுவருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக்கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா?

Seeman-warns-BJP

எங்களை எதிர்கொள்ளத் துளியளவாவது துணிவிருக்கிறதா? எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும். தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன். இவ்வாறு சீமான் எச்சரித்துள்ளார்.

Seeman warns – BJP can approach actor Surya beyond us

Seeman-warns-BJP

Seeman, the chief co-ordinator of the Naam Tamil Party, has warned that reactions to the BJP’s intimidation of actor Surya over the federal government’s cinematography law amendment would be worse.

Seeman’s statement in this regard: Anbuttambi Suryat, who has been active in opposing the black law cinematic legislation against the federalism enshrined in the Constitution of India and against the tyrannical actions of the BJP government which has been uniting and deregulating the pluralism that this country possesses. Screenwriters are part of the community. Brother Surya’s courage and courage are commendable as he continues to express his indignation against injustice with the moral responsibility to raise their voices for the soil and the people;

Seeman-warns-BJP

Realizing the need to oppose this amendment, which has been brought in to stifle the voice of freedom of expression, and the great danger it poses, and its internal politics, it is most sincere. I wholeheartedly welcome it. I assure you that we, the Tamil Party, will stand by his position.

READ ALSO THIS  ரஜினி ஆவேச ட்வீட் - கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ

The BJP, living in an imaginary world beyond science and knowledge, is incapable of confronting ideology, inciting repression, launching personal attacks, speaking obscenely, branding it as anti-social and anti-national. It is ridiculous to invite brother Surya to discuss the cinematography bill.

I also invite the BJP leader, who invites Thampi Surya to the debate, to discuss on the same platform; I call for a logical ideological battle over the BJP regime, the plans they are proposing, the laws they are bringing in, the economic policies they are bringing in and the cinematography legislation they are currently bringing. Ready to discuss with me and my siblings?

READ ALSO THIS  பனை திரு விழாவை செந்தமிழன் சீமான் தொடங்கி வைத்தார் | The Palm Festival was inaugurated by Seeman
Seeman warns BJP

Do you have the guts to face us? Only beyond us can we approach brother Surya. I warn that it will have a bad reaction if brother Surya thinks of himself as an individual and tries to intimidate or intimidate him with the power structure in the middle. Thus Seaman warns.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
Actor SuryaBJPNaamthamizharkatchiNTKseemanSeeman warns BJP
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
அமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்!!!
next post
நடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!!!

தொடர்புடைய தகவல்கள்

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!

கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு...

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on...

அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
  • குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
  • இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

குமரி கற்றாழையின் மருத்துவ குணம் – Medicinal...

நடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்

அரையாண்டு பள்ளித்தேர்வு – தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை...