+1
+1
+1
+1
+1
1
+1
+1

ஒரு பில்லியன் அதாவது 100 கோடி பார்வைகளை கடந்து பெரும் சாதனையை எட்டியுள்ளது தமிழ் சினிமா “ரவுடி பேபி” பாடல்

Tamil movie "Rowdy Baby" song which achieved great success

நடிகர் தனுஷ் மற்றும் இளம் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் யூ டியூப் வலையொளி சேனலில் பல சாதனைகளைப் படைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான “ரவுடி பேபி” என்ற தமிழ் சினிமா பாடல் அதனை முறியடித்துள்ளது.

Tamil movie "Rowdy Baby" song which achieved great success

“மாரி 2” என்ற தமிழ் படத்தில் இடம்பெற்ற இப்பாடலில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். நடன இயக்குனர் பிரபுதேவா நடனம் அமைத்த இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் இருந்த பெரும்பாலானோர் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் “மாரி 2” படம் வெளியானாலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 2 – ஆம் தேதி தான் யூ டியூப் சேனலில் ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அன்றைய தினத்திலிருந்தே அது வைரலாகப் பரவத் தொடங்கியது.

Tamil movie "Rowdy Baby" song which achieved great success

அது தற்போது ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் சாதனை புரிந்துள்ளது “ரவுடி பேபி” பாடல். மேலும் 100 கோடி பார்வைகளைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற பெரும் சாதனையையும் இது எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்கு படக்குழுவினர் பலரும் தொடர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். “ரவுடி பேபி” பாடல் சாதனை தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

Tamil movie "Rowdy Baby" song which achieved great success

“என்ன ஒரு இனிமையான தற்செயல் இது. சரியாக கொலவெறி டி பாடல் வெளியான தினத்தில், 9-வது வருடத்தில் “ரவுடி பேபி” பாடல் 100 கோடி பார்வைகளை எட்டியுள்ளது. 100 கோடி பார்வைகளை எட்டிய முதல் தென்னிந்தியப் பாடல் இது என்பதில் எங்களுக்குப் பெருமை. எங்கள் ஒட்டுமொத்தக் குழுவும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறோம்” என்று அதில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

+1
+1
+1
+1
+1
1
+1
+1