10,000 தேனீக்கள் உடன் போட்டோஷூட் நடுங்கவைக்கும் நிகழ்வுகள் … அதுவும் கர்ப்பக்காலத்தில்..! – வைரலாகும் புகைப்படங்கள்.
பெத்தானியின் சவாலான போட்டோ ஷூட் இன்டெர்னெட்டில் தற்போது வைரலாகி உள்ளது.
டெக்சாஸ் மாகணத்தை சேர்ந்த பெத்தானி கருலக் பேக்கர் தனது வயிற்றில் 10,000 தேனீக்களுடன் நடத்திய போட்டோஷூட் பெரும்பாலான மக்களால் பர்க்கப்பட்டு வருகிறது.
தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தனது கர்ப்பக்கால நினைவுகளை புகைப்படம் எடுப்பது வழக்கம் தான். ஆனால் அது எந்த விதத்திலும் குழந்தைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது.
டெக்சாஸ் மாகணத்தை சேர்ந்தவர் பெத்தானி. இவர் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனது 10,000 தேனீக்களுடன் தனது கர்ப்பக்கால புகைப்பட ஷூட்டை அரங்கேற்றி உள்ளார்.
மேலும் ராணி தேனீ அவரது வயிற்றில் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கு யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இத்னை எனது டக்டரின் ஆலோசனைக்கு பின்புதான் இந்த புகைப்பட ஷூட் நடத்தியுள்ளேன் என்றுள்ளார்.
சென்ற முறை கருக்கலைவு என்னை மிகவும் மனச்சோர்வுக்கு ஆழ்தியது. நான் என் பிறக்கப்போகிற குழந்தையை எண்ணி மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் பெத்தானியின் இந்த புகைப்படஷூட் இணையத்தில் நேர்எதிர்மாறான கருத்துகளை பெற தொடங்கியுள்ளது.
தேனீ வளர்ப்பில் அவர் வல்லுனராக இருக்கலாம். ஆனால் அவர் அவ்ரது குழந்தையின் நலனிலும் அக்கரை செலுத்த வேண்டும்.
பல ஆயிரகணக்கான தேனீக்கள் நேரடியாக வயிற்றில் ஊர்ந்தது பற்றி யோசிக்க முடியவில்லை. குழந்தையின் ஆரோக்யம் மிகவும் முக்கியாமானது என்றும் கூறியுள்ளனர் நெட்டிஷன்கள்.
தேனீ வளர்ப்பில் அவர் வல்லவராக இருந்தாலும் கர்ப்ப காலங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.